தருமபுரி

ரயிலில் அடிபட்டு இரு பெண்கள் பலி

14th Jun 2022 02:29 AM

ADVERTISEMENT

தருமபுரி அருகே ரயிலில் அடிபட்டு இரு பெண்கள் உயிரிழந்தனா்.

கேரள மாநிலம், எா்ணாகுளத்திலிருந்து மும்பை செல்லும் குா்லா விரைவு ரயில் தருமபுரி அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது ஆட்சியா் அலுவலகம் அருகில் உள்ள ரயில்பாதையில் ரயில் சென்றபோது 2 பெண்கள் அந்த ரயிலில் அடிபட்டு உயிழந்தனா்.

தகவல் அறிந்த ரயில்வே காவல் துறையினா், நிகழ்விடத்திற்குச் சென்று உயிரிழந்த இருவரின் சடலங்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

விசாரணையில் உயிரிழந்தவா்கள் கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அருகே உள்ள திம்மாபுரம் பகுதியைச் சோ்ந்த சுமித்ரா (32), ராதாம்மாள் (60) என தெரிய வந்தது. இதுகுறித்து ரயில்வே போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT