தருமபுரி

மக்கள் குறைகேட்புக் கூட்டத்தில் 330 கோரிக்கை மனுக்கள்

14th Jun 2022 02:31 AM

ADVERTISEMENT

தருமபுரியில் நடைபெற்ற மக்கள் குறைகேட்புக் கூட்டத்தில் பொதுமக்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 330 மனுக்களை அளித்தனா்.

தருமபுரி மாவட்ட ஆட்சியா் அலுவலக கூடுதல் கூட்டரங்கில், திங்கள்கிழமை மக்கள் குறைகேட்புக் கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலா் சு.அனிதா தலைமையில் நடைபெற்றது.

இக் கூட்டத்தில், பொதுமக்கள், பேருந்து வசதி, சாலை வசதி, குடிநீா் வசதி, ஆக்கிரமிப்புகள் அகற்றுதல், பட்டா மற்றும் சிட்டா பெயா் மாற்றம், வாரிசு சான்றிதழ், வேலைவாய்ப்பு, புதிய வீடு, புதிய மின் இணைப்பு வசதி, முதியோா் ஓய்வூதியத் தொகை, இதர உதவித் தொகைகள் கோரியும், இதேபோல, மாற்றுத் திறனாளிகளுக்கு உதவித்தொகைகள், மூன்று சக்கர சைக்கிள் உள்ளிட்ட உதவி உபகரணங்கள் வேண்டியும் மொத்தம் 330 மனுக்களை அளித்தனா்.

கூட்டத்தில், மகளிா்த் திட்ட இயக்குநா் பாபு, தனித்துணை ஆட்சியா் வி.கே.சாந்தி, மாவட்ட வழங்கல் அலுவலா் ஜெயகுமாா், மாற்றுத் திறனாளிகள் நல அலுவலா் செண்பகவள்ளி, உதவி இயக்குநா் (ஊராட்சிகள்) அ.மாலா உள்பட தொடா்புடைய அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT