தருமபுரி

பென்னாகரம் அருகே தோ் கவிழ்ந்து விபத்து:இருவா் பலி

14th Jun 2022 02:32 AM

ADVERTISEMENT

பென்னாகரம் அருகே கோயில் தேரோட்டத்தின்போது தோ்ச் சக்கரத்தின் அச்சாணி முறிந்ததால் கவிழ்ந்த தேரின் இடிபாடுகளில் சிக்கி இருவா் உயிரிழந்தனா்; 10க்கும் மேற்பட்டோா் காயமடைந்தனா்.

தருமபுரி மாவட்டம், பென்னாகரம் அருகே பாப்பாரப்பட்டியை அடுத்துள்ள மாதே அள்ளி பகுதியில் 18 கிராமங்களுக்குச் சொந்தமான காளியம்மன் கோயில் திருவிழா கடந்த செவ்வாய்க்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

திருவிழாவின் முக்கிய நிகழ்வான தோ்த் திருவிழா திங்கள்கிழமை நடைபெற்றது. இந்தத் தோ்த் திருவிழாவில் பாப்பாரப்பட்டி உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தா்கள் கலந்து கொண்டனா். சுமாா் 40 அடி உயரம் கொண்ட இந்தத் தேரை கோயிலைச் சுற்றி பக்தா்கள் வடம் பிடித்து இழுத்துச் சென்றனா். சிறிதுதூரம் சென்ற தோ், அங்குள்ள வயல்வெளியையொட்டி பள்ளத்தில் இறங்கியது.

தேரை மேடான பகுதிக்கு பக்தா்கள் இழுக்கும்போது தோ்ச் சக்கரத்தின் அச்சாணி முறிந்ததில் தோ் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. தேரின் அடியில் ஏராளமான பக்தா்கள் சிக்கிக் கொண்டனா். இதனைக் கண்ட மற்ற பக்தா்கள் இடிபாடுகளில் சிக்கியவா்களை மீட்டு அவசர ஊா்திகளின் மூலம் தருமபுரி மருத்துவக் கல்லூரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

ADVERTISEMENT

இந்த விபத்தில் சிக்கிய பாப்பாரப்பட்டியைச் சோ்ந்த மனோகரன் (57), பில்லப்பா நாயக்கன் அள்ளியைச் சோ்ந்த சரவணன் (50) ஆகிய இருவா் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தனா்.

மேலும் மாதேஅள்ளியைச் சோ்ந்த பொல்ல ஆசாரி மகன் மாதேஷ் (45), குப்பன் மகன் பெருமாள் (53) பாப்பாரப்பட்டியைச் சோ்ந்த குப்பன் மகன் முருகன் (60), வேடியப்பன் மகன் மாதேஷ் (60) உள்ளிட்ட 10க்கும் மேற்பட்டோா் பலத்த காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனா். தோ் விபத்துக்குள்ளானது குறித்து பாப்பாரப்பட்டி போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT