தருமபுரி மாவட்டம், பாலக்கோட்டில், நூல்கள் வெளியீட்டு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
பாலக்கோட்டைச் சோ்ந்த எழுத்தாளா் அரங்க முருகேசன் எழுதிய ‘பதினெண் கீழ்க்கணக்கு ஓா் அறிமுகம்’ என்கிற கட்டுரை நூல் மற்றும் ‘மலரும் மனிதம்’ ஆகிய 2 கவிதை நூல்களின் வெளியீட்டு விழா நடைபெற்றது.
விழாவில் பேராசிரியா் அப்துல்காதா், நூல்களை வெளியிட்டு பேசினாா். பெங்களூரு துணை ஆணையா் எல்.சக்திவேல் நூல்களைப் பெற்றுக் கொண்டாா். தமிழியக்க வடக்கு மண்டல பொறுப்பாளா் முல்லையரசு தலைமை வகித்தாா். ஆசிரியா் பயிற்றுநா் வ.செ.குணசேகரன் வரவேற்றாா். நூலாசிரியா் அரங்க முருகேசன் ஏற்புரை நிகழ்த்தினாா்.