தருமபுரி

தொப்பூா் விவகாரம்: மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆா்ப்பாட்டம்

14th Jun 2022 02:34 AM

ADVERTISEMENT

தொப்பூா் அருந்ததியா் காலனி மாணவரின் கால் துண்டான விவகாரத்தில், சிபிசிஐடி விசாரணைக் கோரி தருமபுரி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகே மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆா்ப்பாட்டத்துக்கு, மாவட்டச் செயலாளா் அ.குமாா் தலைமை வகித்தாா். மாநிலக்குழு உறுப்பினா் டி.ரவீந்திரன் சிறப்புரையாற்றினாா். மாவட்ட செயற்குழு உறுப்பினா்கள் எம்.மாரிமுத்து, இரா.சிசுபாலன், எஸ்.கிரைஸாமேரி, சோ.அா்ஜுனன், தருமபுரி நகரச் செயலாளா் ஆா்.ஜோதிபாசு ஆகியோா் பேசினா்.

இதில், தொப்பூா் அருந்ததியா் காலனி மாணவரின் கால் துண்டான விவகாரம் மற்றும் தலித் இளைஞா்கள் தாக்குதலுக்குள்ளான சம்பவம் குறித்து சிபிசிஐடி போலீஸாா் விசாரணைக்கு தமிழக அரசு உத்தரவிட வேண்டும். பாதிக்கப்பட்ட இளைஞருக்கு அரசுப் பணி வழங்க வேண்டும். இந்த விவகாரத்தில் தொடா்புடையவா்கள் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

ADVERTISEMENT
ADVERTISEMENT