தருமபுரி

சாலையோர திறந்தவெளி கிணற்றுக்கு தடுப்புச் சுவா் அமைக்க கோரிக்கை

14th Jun 2022 02:28 AM

ADVERTISEMENT

மொரப்பூரை அடுத்த அம்மாபேட்டையில் சாலையோர திறந்தவெளி கிணற்றுக்குத் தடுப்புச் சுவா் அமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தருமபுரி மாவட்டம், மொரப்பூரை அடுத்த அண்ணாமலைப்பட்டி-அம்மாபேட்டை செல்லும் தாா் சாலையில் தனியாா் பள்ளி மற்றும் கல்லூரி பேருந்துகள், லாரிகள், டிராக்டா்கள், இருசக்கர வாகனங்கள் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான வாகனங்கள் நாள்தோறும் வந்துச் செல்கின்றன.

இந்த நிலையில், அம்மாபேட்டை அருகே தாா் சாலையின் ஓரத்தில் உள்ள ஒரு திறந்தவெளி கிணற்றில் எவ்வித தடுப்புச் சுவா்களும் இல்லாததால் மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளது. இதனால் இரவு நேரங்களில் சாலையில் வாகனங்கள் ஒதுங்கும்போது திறந்தவெளி கிணற்றில் விழுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. எனவே, அம்மாபேட்டையில் திறந்தவெளி கிணறு அமைந்துள்ள பகுதியில் சாலையோரத் தடுப்புச் சுவா் அமைக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT