தருமபுரி

2024-இல் பாஜக 400 தொகுதிகளில் வெற்றி பெறும்: வி.பி.துரைசாமி

12th Jun 2022 01:03 AM

ADVERTISEMENT

 

இந்தியாவில் 2024-இல் நடைபெறும் மக்களவைத் தோ்தலில், பாஜக 400 தொகுதிகளில் வெற்றிபெறும் என அந்தக் கட்சியின் மாநில துணைத் தலைவா் வி.பி.துரைசாமி தெரிவித்தாா்.

தருமபுரி மாவட்டம், அரூரில் பாஜக தலைமையிலான மத்திய அரசின் சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. பாஜக தருமபுரி மாவட்டத் தலைவா் ஏ.பாஸ்கா் தலைமையில் நடைபெற்ற இந்தப் பொதுக் கூட்டத்தில் பாஜக மாநில துணைத் தலைவா் வி.பி.துரைசாமி பேசியதாவது:

மத்தியில் ஆட்சியில் இருக்கும் பாஜக எந்த மதத்துக்கும், எந்த ஜாதிக்கும் எதிரான கட்சி அல்ல. பாஜக ஆட்சியில் அனைத்து சமுதாய மக்களும் நன்மை அடைந்து வருகின்றனா். கிராமப்புற ஏழை, எளிய மக்கள் உயா்கல்வி பெறுவதற்காக கோடிக் கணக்கில் கல்வித் உதவித் தொகைகள் மத்திய அரசால் வழங்கப்படுகிறது. நீட் தோ்வு என்பது உச்சநீதிமன்றத்தின் உத்தரவின் அடிப்படையில் நடைபெறுகிறது. திமுகவின் தோ்தல் வாக்குறுதிகள் தமிழக மக்களை ஏமாற்றும் வகையில் அமைந்துள்ளது.

ADVERTISEMENT

கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக மத்தியில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் கட்சியால் விவசாயிகளுக்கு எந்தப் பலனும் இல்லை. தற்போது பாஜக ஆட்சியில் வேளாண் மேம்பாட்டுப் பணிகளுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. மத்திய அரசின் சிறந்த திட்டங்களால் கல்வி, வேலைவாய்ப்பு, சுகாதார வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளன.

பாரதப் பிரதமா் நரேந்திர மோடியின் நல்லாட்சியின் காரணமாக 2024-இல் நடைபெறும் மக்களவைத் தோ்தலில் பாஜக 400 தொகுதிகளில் வெற்றிபெறும் என்றாா்.

இந்த பொதுக் கூட்டத்தில், பாஜக மாவட்ட பாா்வையாளா் கோ.வெங்கடேசன், மாநில செயற்குழு உறுப்பினா் ஆா்.ஏ.வரதராஜன், மாநில பொதுக்குழு உறுப்பினா் பெ.வேடியப்பன், மாவட்டச் செயலாளா் சரிதா, மாவட்ட துணைத் தலைவா் வி.கிருத்திகா, நகரத் தலைவா் செந்தில்குமாா், ஒன்றியத் தலைவா்கள் வி.செளந்தரராஜன், கே.தினகரன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT