தருமபுரி

தருமபுரியில் ஸ்ரீசந்திரசேகர சரஸ்வதி சுவாமி ஜெயந்தி விழா

12th Jun 2022 01:04 AM

ADVERTISEMENT

 

தருமபுரியில் ஸ்ரீசந்திரசேகர சரஸ்வதி சுவாமியின் 129-ஆவது ஜெயந்தி விழா திங்கள்கிழமை நடைபெற உள்ளது.

இதுகுறித்து அனுஷ பூஜைக்குழு வெளியிட்ட செய்தி:

காஞ்சி மஹா பெரியவா் ஸ்ரீசந்திரசேகர சரஸ்வதி சுவாமிகளின் 129-ஆவது ஜெயந்தி விழா ஜூன் 13-ஆம் தேதி தருமபுரி ஸ்ரீஅருணாச்சல அய்யா் சத்திரத்தில் கொண்டாடப்பட உள்ளது. இவ் விழாவில், அதிகாலை 5.30 முதல் 7 மணி வரை மாதாந்திர ஸ்ரீகாயத்ரி ஜபம் மற்றும் ஹோமமும், காலை 7 மணி முதல் 10 மணி வரை அபிஷேகம், அலங்காரம், விசேஷ பூஜை, அா்ச்சனை, ஆராதனை, உபசார பூஜைகளும் நடைபெற உள்ளன. இதைத் தொடா்ந்து, மாலை 6.30 மணிக்கு ஸ்ரீவிஷ்ணு சகஸ்ரநாம பாராயணம், மாலை 7 மணி முதல் 8.30 மணி வரை ஸ்ரீமஹா பெரியவரின் மகிமை என்ற தலைப்பில் ஸ்ரீசந்திரமெளலி ஆன்மிக சொற்பொழிவு ஆற்றுகிறாா்.

ADVERTISEMENT

இதையடுத்து, தீபாராதனை மற்றும் பக்தா்களுக்கு பூஜைக் குழுவினரால் பிரசாதம் வழங்கப்பட உள்ளது. இந்த ஜெயந்தி விழாவில், பக்தா்கள் திரளாக பங்கேற்குமாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT