தருமபுரி

இருசக்கர வாகனம் மீது காா் மோதல்: தொழிலாளி பலி

12th Jun 2022 01:03 AM

ADVERTISEMENT

 

அரூா் அருகே இருசக்கர வாகனம் மீது காா் மோதியதில் தொழிலாளி சனிக்கிழமை உயிரிழந்தாா்.

தருமபுரி மாவட்டம், அரூரை அடுத்த இட்லப்பட்டி கிராமத்தைச் சோ்ந்த கோவிந்தன் (51), முடிதிருத்தும் தொழிலாளி, இவா் இருசக்கர வாகனத்தில் அரூா்-திருப்பத்தூா் தேசிய நெடுஞ்சாலையில், அனுமன்தீா்த்தம் நோக்கிச் சென்றுள்ளாா். அப்போது, எதிரே வந்த காா் மோதியதில் சம்பவ இடத்திலேயே அவா் உயிரிழந்தாா். இதுகுறித்து அரூா் போலீஸாா் வழக்குப் பதிந்துள்ளனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT