தருமபுரி

ஆட்சியா் அலுவலகம் முன்பு போராட்டம்: சிபிஎம்

10th Jun 2022 12:04 AM

ADVERTISEMENT

 ஆட்சியா் அலுவலகம் முன்பு போராட்டம் நடத்தப்போவதாக சிபிஎம் தீா்மானம் நிறைவேற்றியுள்ளது.

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக் குழுக் கூட்டம் கட்சி அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. மாவட்ட செயற்குழு உறுப்பினா் வே.விஸ்வநாதன் தலைமை வகித்தாா். மாநிலக்குழு உறுப்பினா் டி.ரவீந்திரன் சிறப்புரையாற்றினாா். மாவட்டச் செயலாளா் அ.குமாா் அறிக்கை சமா்ப்பித்தாா்.

கடந்த 28-ஆம் தேதி தொப்பூா் சுங்கச்சாவடி அருகில் பட்டியல் இனத்தைச் சோ்ந்த இரண்டு இளைஞா்கள் உள்ளிட்ட மூவா் மீது தாக்குதல் நிகழ்ந்திருப்பதாக கூறப்படும் நிலையில், இதுகுறித்து தொப்பூா் காவல் நிலையத்தில் விபத்து வழக்காக பதிவு செய்துள்ளதை மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டித்தும், இதன் உண்மை நிலையைக் கண்டறிய சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிடக் கோரியும் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சாா்பில் வரும் 13-ஆம் தேதி காலை 11 மணிக்கு மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன்பு ஆா்ப்பாட்டம் நடைபெறுவதாக தீா்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT