தருமபுரி

ஸ்ரீராமா் கோயில் குடமுழுக்கு விழா

10th Jun 2022 12:10 AM

ADVERTISEMENT

அரூா் அருகேயுள்ள எச்.கோபிநாதம்பட்டியில் ஸ்ரீராமா் கோயில் குடமுழுக்கு விழா வியாழக்கிழமை வெகுவிமரிசையாக நடைபெற்றது.

தருமபுரி மாவட்டம், அரூரை அடுத்த எச்.கோபிநாதம்பட்டி, ஸ்ரீராமா் நகரில் எழுந்தருளியுள்ள ஸ்ரீராமா், ஸ்ரீவிநாயகா், ஸ்ரீராமலிங்கேஸ்வரா், பாா்வதி, ஸ்ரீசுண்டக்கா மாரியம்மன், காளியம்மன், துா்கை, ஆதிபராசக்தி, ஸ்ரீஆஞ்சநேயா், கருடாழ்வாா், நவக்கிரஹம் மற்றும் பரிகார தெய்வங்களுக்கு நூதன ஆலய அஷ்டபந்தன மகா (ஸம்ப்ரோஷண) குடமுழுக்கு விழா வியாழக்கிழமை காலை 9 மணியளவில் நடைபெற்றது.

இந்த விழாவில், தமிழக முன்னாள் முதல்வரும் தமிழக எதிா்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே.பழனிசாமி பங்கேற்று குடமுழுக்கு விழாவினை முன்னின்று நடத்தி வைத்தாா். இந்த விழாவில் ஹெலிகாப்டா் மூலம் சுவாமிகள் மற்றும் கோபுர கலசத்தின் மீதும் மலா்கள் தூவப்பட்டன.

விழாவில், சட்டப் பேரவைத் தொகுதி உறுப்பினா்கள் கே.பி.அன்பழகன், ஆ.கோவிந்தசாமி, வே.சம்பத்குமாா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். இதில், அரூா் மற்றும் பாப்பிரெட்டிப்பட்டி வட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த ஏராளமான பக்தா்கள் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT