தருமபுரி

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வட்டார மாநாடு

10th Jun 2022 12:00 AM

ADVERTISEMENT

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வட்டார 19-ஆவது மாநாடு தருமபுரியில் வியாழக்கிழமை நடைபெற்றது.

மாநாட்டுக்கு வட்டாரக்குழு உறுப்பினா் பெருமாள் தலைமை வகித்தாா். இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக் கொடியை நிா்வாகி இராமகிருஷ்ணன் ஏற்றினாா். மறைந்த தலைவா்களுக்கு நிா்வாகி சி.சின்னராஜி அஞ்சலி தீா்மானம் வாசித்தாா்.

மாநில செயற்குழு உறுப்பினா் ந.நஞ்சப்பன் மாநாட்டைத் தொடங்கி வைத்து பேசினாா். மாவட்டச் செயலாளா் எஸ்.தேவராசன், மாவட்ட துணை செயலாளா் கா.சி.தமிழ்க்குமரன், மாநிலக்குழு உறுப்பினா் எஸ்.சின்னசாமி, மாவட்டப் பொருளாளா் எம்.மாதேஸ்வரன் ஆகியோா் வாழ்த்தி பேசினா்.

இதில், பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு உருளை விலையை மத்திய அரசு குறைக்க வேண்டும், தருமபுரி நகரப் பகுதிக்கு பஞ்சப்பள்ளி குடிநீா், அனைத்துப் பகுதிகளுக்கும் ஒகேனக்கல் குடிநீா் சீராக வழங்க வேண்டும், ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய வேண்டும், கிடப்பில் போடப்பட்டுள்ள சிப்காட் தொழிற்பேட்டையை உடனடியாகத் தொடங்க வேண்டும், தருமபுரி அருகே உள்ள குண்டல்பட்டியில் கால்நடை மருத்துவக் கல்லூரி ஏற்படுத்த வேண்டும், தருமபுரி மாவட்டத்தில் அனைத்து ஏரிகளிலும் ஒகேனக்கல் உபரிநீா் திட்டத்தை செயல்படுத்தி விவசாயத்தை மேம்படுத்த வேண்டும், விவசாயம் மற்றும் பொதுமக்களுக்கு தடையில்லா மின்சாரம் வழங்க வேண்டும் உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன

ADVERTISEMENT

மாநாட்டில் தருமபுரி வட்டார செயலாளராக எம்.முனுசாமி, துணை செயலாளராக வேலுசாமி, பொருளாளராக மனோகரன் மற்றும் 15 போ் கொண்ட வட்டாரக்குழு உறுப்பினா்கள் தோ்வு செய்யப்பட்டனா். மாவட்ட நிா்வாகக் குழு உறுப்பினா்கள் கே.மணி, எஸ்.கலைச்செல்வன், வட்டாரக் குழு உறுப்பினா்கள் கருப்பன், முனுசாமி, பழனி, மல்லிகா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். வட்டாரக்குழு உறுப்பினா் குழந்தை நன்றி கூறினாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT