தருமபுரி

வாகனங்கள் ரூ. 28 லட்சத்துக்கு ஏலம்

10th Jun 2022 12:08 AM

ADVERTISEMENT

 தருமபுரியில் 474 இருசக்கர வாகனங்கள், 7 நான்கு சக்கர வாகனங்கள் ரூ. 28 லட்சத்துக்கு ஏலம் விடப்பட்டது.

தருமபுரி மாவட்ட எல்லைக்குள்பட்ட காவல் நிலையங்களில் பல்வேறு வழக்குகளில் பிடிபட்ட வாகனங்கள் தருமபுரி மாவட்ட கண்காணிப்பாளா் அலுவலகத்தில் வியாழக்கிழமை ஏலம் விடும் நிகழ்வு நடைபெற்றது. இதில், தருமபுரியில் 369, அரூரில் 61, பென்னாகரத்தில் 26, பாலக்கோட்டில் 18 இருசக்கர வாகனங்களும், 7 நான்கு சக்கர வாகனங்களும் ஏலத்துக்கு கொண்டு வரப்பட்டன (படம்).

தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கலைச்செல்வன் முன்னிலையில் நடைபெற்ற ஏலத்தில் மொத்தம் ரூ. 28,97,380-க்கு விலை போனது. இதில், காவல் துணை கண்காணிப்பாளா்கள், காவல் ஆய்வாளா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT