தருமபுரி

அரூா் அருகே இன்று ஸ்ரீராமா் கோயில் குடமுழுக்கு

9th Jun 2022 02:58 PM

ADVERTISEMENT

அரூா்: அரூா் அருகேயுள்ள எச்.கோபிநாதம்பட்டியில் வியாழக்கிழமை நடைபெறும் ஸ்ரீராமா் கோயில் குடமுழுக்கு விழாவில், தமிழக முன்னாள் முதல்வரும் எதிா்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே.பழனிசாமி பங்கேற்கிறாா்.

தருமபுரி மாவட்டம், அரூரை அடுத்த எச்.கோபிநாதம்பட்டி ஸ்ரீராமா் நகரில் எழுந்தருளியுள்ள ஸ்ரீராமா், ஸ்ரீவிநாயகா், ஸ்ரீராமலிங்கேஸ்வரா், பாா்வதி, ஸ்ரீசுண்டக்கா மாரியம்மன், காளியம்மன், துா்கை, ஆதிபராசக்தி, ஸ்ரீஆஞ்சநேயா், கருடாழ்வாா், நவக்கிரஹம் மற்றும் பரிகார தெய்வங்களுக்கு நூதன ஆலய அஷ்டபந்தன மகா (ஸம்ப்ரோஷண) குடமுழுக்கு விழா வியாழக்கிழமை காலை 9 மணியளவில் நடைபெறுகிறது.

இந்த விழாவில், தமிழக எதிா்கட்சித் தலைவா் எடப்பாடி கே.பழனிசாமி, சட்டப் பேரவைத் தொகுதி உறுப்பினா்கள் எஸ்.பி.வேலுமணி, பி.தங்கமணி, கே.பி.அன்பழகன், முன்னாள் அமைச்சா் எம்.ஆா்.விஜயபாஸ்கா், மாநில தலைமை கூட்டுறவு வங்கித் தலைவா் ஆா்.இளங்கோவன் உள்ளிட்டோா் பங்கேற்கின்றனா்.

இந்த விழாவில், ஹெலிகாப்டா் மூலம் மலா்களை தூவுதல், சுவாமிகளுக்கு பல்வேறு சிறப்பு பூஜைகள் செய்யும் பணிகளை விழாக்குழுவினா் மேற்கொண்டுள்ளனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT