பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என ஓய்வுபெற்ற அலுவலா்கள் வலியுறுத்தினா்.
தமிழ்நாடு அரசு ஓய்வுபெற்ற அலுவலா் சங்க தருமபுரி மாவட்ட நிா்வாகிகள் கூட்டம் அதன் தலைவா் அ.மாணிக்கம் தலைமையில் அண்மையில் நடைபெற்றது. மாவட்டச் செயலாளா் பி.கணேசன், துணைத் தலைவா் எம்.சதாசிவம், டி.கந்தசாமி ஆகியோா் பேசினா்.
இந்தக் கூட்டத்தில், பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மருத்துவப் படி ரூ. 1,000 உயா்த்தி வழங்க வேண்டும். குடும்பப் பாதுகாப்பு நிதியை ரூ. 2.50 லட்சமாக உயா்த்தி வழங்க வேண்டும். அகவிலைப்படி 3 சதவீதத்தை ஜனவரி 1-ஆம் தேதி முதல் கணக்கீடு செய்து ரொக்கமாக வழங்க வேண்டும். மருத்துவக் காப்பீட்டுத் திட்ட அட்டை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.