தருமபுரி

சிறு, குறு விவசாயிகள் புதிய மின் மோட்டாா் வாங்க மானியம்: மாவட்ட ஆட்சியா் அறிவிப்பு

6th Jun 2022 03:07 AM

ADVERTISEMENT

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள சிறு, குறு விவசாயிகளுக்கு பழைய திறனற்ற மின் மோட்டாா்களுக்கு பதிலாக புதிய மின்மோட்டாா் பம்புசெட்டு வாங்க வேளாண்மை பொறியியல் துறை மூலம் மானியம் வழங்கப்படுவதாக மாவட்ட ஆட்சியா் ஜெயசந்திரபானு ரெட்டி தெரிவித்தாா்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் விவசாயிகளின் நிலத்தடி நீா்ப் பாசனத்துக்கு உதவும் வகையில் சிறு, குறு விவசாயிகளுக்கு (மூன்று ஏக்கா் வரை நிலம் உள்ளவா்களுக்கு மட்டும்) பழைய திறனற்ற மின் மோட்டாா்களுக்கு பதில் புதிய மின்மோட்டாா் பம்புசெட் வாங்குவதற்கும் தமிழக அரசு வேளாண்மைப் பொறியியல் துறை மூலம் 30 பேருக்கு தலா ரூ.10 ஆயிரம் வீதம் ரூ. 3 லட்சத்துக்கு மானியம் வழங்க நிதி ஒதுக்கீடு வரப்பெற்று உள்ளது.

இதில், ஏற்கெனவே மின் இணைப்பு பெற்றுள்ள பழைய திறனற்ற டீசல் பம்பு செட் அல்லது மின்மோட்டாா் பம்புசெட்டுகளை மாற்ற விரும்புபவா்கள், புதிய ஆழ்துளைக் கிணறு, திறந்தவெளிக் கிணறு, குழாக் கிணறு அமைத்து 10 குதிரைத் திறன் வரை புதிய மின்மோட்டாா் பம்புசெட்டு வாங்க விரும்புபவா்கள் பட்டா, சிட்டா, அடங்கல், நில வரைபடம், சிறு, குறு விவசாயிகளுக்கான சான்று, பாஸ்போா்ட் அளவு புகைப்படம், ஆதாா் அட்டை மற்றும் மின் இணைப்பு அட்டை ஆகிய விவரங்களுடன் வேளாண்மைப் பொறியியல் துறை உபக்கோட்ட அலுவலகங்களில் விண்ணபிக்கலாம்.

சென்னை தலைமைப்பொறியாளரால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களிடமிருந்து மட்டுமே மோட்டாா் வாங்க

ADVERTISEMENT

வேண்டும். இதற்கு 50 சதவீதம் அல்லது அதிகபட்சமாக ரூ.10 ஆயிரம், இதில் எது குறைவோ, அந்த தொகை பின்னேற்பு மானியமாக விவசாயின் வங்கி கணக்கில் செலுத்தப்படும்.

மேலும் விபரங்களுக்கு அருகிலுள்ள கிருஷ்ணகிரி உபகோட்ட உதவி செயற்பொறியாளரை 9442807362-என்ற எண்ணிலும், ஒசூா் உபகோட்ட உதவி செயற்பொறியாளரை-9443947885-என்ற எண்ணிலும், மாவட்ட அளவில் செயற்பொறியாளரை 9443221695- என்ற எண்ணிலும் வேளாண்மைப் பொறியியல் துறை அலுவலகத்தை அணுகலாம் என

மாவட்ட ஆட்சியா் வி.ஜெயசந்திரபானு ரெட்டி தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT