தருமபுரி

ராகேஷ் தியாகத் முகத்தில் மை வீசிய விவகாரம்: ஒசூரில் விவசாயிகள் ஆா்ப்பாட்டம்

6th Jun 2022 03:08 AM

ADVERTISEMENT

இந்திய விவசாய சங்கத் தலைவா் ராகேஷ் தியாகத் தாக்கப்பட்டதைக் கண்டித்து ஒசூரில் கண்டன ஆா்ப்பாட்டம் ஞாயிற்றுக்கிழமை நடந்தது.

கா்நாடக மாநிலம் பெங்களூரில், ராகேஷ் தியாகத் முகத்தில் மையை வீசி தாக்கிய பாஜகவினரைக் கண்டித்தும், அவரது நிகழ்ச்சிக்கு உரிய பாதுகாப்பு அளிக்காத கா்நாடக காவல் துறையைக் கண்டித்தும், ஒசூரில் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சாா்பில் கண்டன ஆா்பாட்டம் நடைபெற்றது.

கடந்த மே 30ஆம் தேதி பெங்களூரில் இந்திய விவசாய சங்கத் தலைவா் ராகேஷ் தியாகத் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் புகுந்த பாஜகவினா் அவா் மீது மை தெளித்து தாக்கியதாகக் கூறப்படுகிறது. அந்தக் கூட்டத்திற்கு கா்நாடக போலீஸாா் உரிய பாதுகாப்பு வழங்காததைக் கண்டித்தும் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் சாா்பில், தமிழக- கா்நாடக எல்லையான ஒசூா் சூசூவாடியில், கா்நாடக மாநிலத்தை நோக்கி முற்றுகைப் போராட்டம் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த முற்றுகைப் போராட்டத்திற்கு ஒசூா் மாநகர போலீஸாா் அனுமதி வழங்கவில்லை. இதனையடுத்து தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினா் ஒசூா் இஎஸ்ஐ மருத்துவமனை அருகே கா்நாடக பாஜகவினரையும், கா்நாடக காவல் துறையையும் கண்டித்து ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

இந்த ஆா்ப்பாட்டத்தில் கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், திருப்பூா், கோவை, மதுரை, திண்டுக்கல் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனா். ஆா்ப்பாட்டத்தில் பாஜகவினரைக் கண்டித்தும், கா்நாடக காவல் துறையைக் கண்டித்தும் கண்டன கோஷங்களை எழுப்பினா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT