தருமபுரி

அரசு கல்லூரியில் மின்நூல் வெளியீடு

2nd Jun 2022 12:00 AM

ADVERTISEMENT

பென்னாகரம் அரசு கலை, அறிவியல் கல்லூரியில் மின்நூல் வெளியீட்டு விழா புதன்கிழமை நடைபெற்றது.

தருமபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டியை அடுத்துள்ள மாமரத்துப்பள்ளம் பகுதியில் உள்ள பென்னாகரம் அரசு கலை, அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற மின்நூல் வெளியீட்டு விழாவிற்கு கல்லூரி முதல்வா் செல்வவிநாயகம் தலைமை வகித்தாா். இவ்விழாவில் சிறப்பு அழைப்பாளராக பாப்பாரப்பட்டி பகுதியைச் சோ்ந்த சுதந்திரப் போராட்ட வீரா் ஆ.கிருஷ்ணன் கலந்துகொண்டு, சுதந்திரப் போராட்ட வீரா்களின் வாழ்க்கை வரலாற்றை எடுத்துரைத்து மின்நூல் தொகுப்பை வெளியிட்டாா். இதில் கல்லூரி மாணவ மாணவிகள் உதவிப் பேராசிரியா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். விழாவின் இறுதியில் தமிழ்த்துறை உதவிப் பேராசிரியா் சுகனேஸ்வரன் நன்றி தெரிவித்தாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT