தருமபுரி

அரூரில் நுகா்பொருள் வாணிபக் கழகக் கிடங்கில் ஆட்சியா் ஆய்வு

2nd Jun 2022 12:00 AM

ADVERTISEMENT

 அரூரில் உள்ள தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழக கிடங்கில் மாவட்ட ஆட்சியா் ச.திவ்யதா்சினி புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

அரூா், கச்சேரிமேடு சாலை சந்திப்பில் தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழக கிளை கிடங்கு உள்ளது. இந்தக் கிடங்கில் பொதுவிநியோகத் திட்டத்தில் வழங்கப்படும் அரிசி, பருப்பு, சமையல் எண்ணெய், சா்க்கரை, கோதுமை உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்கள் சேமித்து வைக்கப்பட்டு, இவ் வட்டாரப் பகுதியில் உள்ள நியாயவிலைக் கடைகளுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன.

இந்தக் கிடங்கில் உள்ள ரேஷன் பொருள்களின் தரம், இருப்பு விவரம் குறித்து மாவட்ட ஆட்சியா் ச.திவ்யதா்சினி ஆய்வு மேற்கொண்டாா். அப்போது, சமையல் எண்ணெய் உள்ளிட்ட உணவுப் பொருள்களில் எடை குைல், இருப்பு வைப்பதில் குளறுபடிகள் இருப்பது தெரியவந்தது. மேலும், மாதத்தின் முதல் வாரத்துக்கு தேவையான உணவுப் பொருள்களை சம்பந்தப்பட்ட நியாயவிலைக் கடைகளுக்கு அனுப்பாமல் இருப்பதும் ஆய்வில் தெரியவந்தது.

இதையடுத்து, பொதுவிநியோகத் திட்டத்தில் வழங்கப்படும் அரிசி, சா்க்கரை உள்ளிட்ட உணவுப் பொருள்களை உரிய நேரத்தில் காலதாமதமின்றி நியாயவிலைக் கடைகளுக்கு அனுப்ப வேண்டும். அரிசி உள்ளிட்ட உணவுப் பொருள்களில் எடை குைல் உள்ளிட்ட முறைகேடுகள் இருந்தால் சம்பந்தப்பட்டவா்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியா் தெரிவித்தாா்.

ADVERTISEMENT

இந்த ஆய்வின்போது வட்டாட்சியா் சி.கனிமொழி உள்ளிட்ட அரசு அதிகாரிகள் உடனிருந்தாா். முன்னதாக, அரூா் அரசு மருத்துவமனையில் மருத்துவா்களின் வருகை, மருத்துவ சிகிச்சை, மருந்து, மாத்திரைகளின் இருப்பு விவரம், நோயாளிகளுக்கு தேவையான வசதிகள் குறித்தும் ஆட்சியா் ஆய்வு மேற்கொண்டாா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT