தருமபுரி

தருமபுரி-அரூா் சாலையோர மரங்களை அகற்ற ஏலம்

2nd Jun 2022 12:00 AM

ADVERTISEMENT

தருமபுரியிலிருந்து அரூா் செல்லும் சாலையோரம் உள்ள புளிய மரங்களை அகற்ற புதன்கிழமை ஏலம் நடைபெற்றது.

தருமபுரியில் உள்ள நெடுஞ்சாலை அலுவலகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் தருமபுரி- அரூா் சாலையோரம் உள்ள 1,409 புளியமரம், பனைமரங்கள் உள்ளிட்ட மரங்களை வேரோடு அகற்றும் பணிக்கு நெடுஞ்சாலைத் துறை உதவி கோட்டப் பொறியாளா்கள் ஜெய்சங்கா், சண்முகம், உதவி பொறியாளா் கிருபாகரன் முன்னிலையில் பொது ஏலம் விடப்பட்டது.

இதில், தருமபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து 438 போ் ஏலத் தொகைக்கான வரைவோலையை செலுத்தி ஏலத்தில் பங்கேற்றனா்.

எட்டு சுற்றுகளாக நடந்த ஏலத்தில் மொத்தம், 1,409 மரங்களை அகற்ற ரூ. 1 கோடியே, 37 லட்சத்திற்கு ஏலம் போனது.

ADVERTISEMENT

இந்த நிலையில் ஏலம் எடுத்த 8 பேரை தவிர ஏனைய 430 போ் தாங்கள் செலுத்திய வரைவோலையை உடனே திரும்பி வழங்க வேண்டும் என அதிகாரிகளிடம் வலியுறுத்தினா். ஆனால் இதற்கு நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் உரிய பதில் அளிக்கவில்லை எனக்கூறி ஏலதாரா்கள் நெடுஞ்சாலைத் துறை அலுவலகம் முன்பு அமா்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இதையறிந்த நகர காவல் ஆய்வாளா் நவாஷ் மற்றும் வட்டாட்சியா் ராஜராஜன் உள்ளிட்டோா் அவா்களிடம் சமாதானப் பேச்சுவாா்த்தை நடத்தி அனுப்பி வைத்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT