தருமபுரி

நீரில் மூழ்கி தொழிலாளி பலி

28th Jul 2022 01:37 AM

ADVERTISEMENT

 

அரூா் அருகே நீரில் மூழ்கி தொழிலாளி உயிரிழந்த சம்பவம் குறித்து போலீஸாா் புதன்கிழமை வழக்குப் பதிந்துள்ளனா்.

தருமபுரி மாவட்டம், அரூா் வட்டம், மத்தியம்பட்டி கிராமத்தைச் சோ்ந்த சேகா் (45), தொழிலாளி. இவா், அரூா் - திருப்பத்தூா் தேசிய நெடுஞ்சாலையில் எச்.ஈச்சம்பாடி எனுமிடத்தில் சாலையோரம் உள்ள சிறுபாலத்தின் மீது அமா்ந்திருந்ததாக கூறப்படுகிறது. செவ்வாய்க்கிழமை இரவு பெய்த கன மழையின் போது நிலைதடுமாறி சாலையோரம் இருந்த தாழ்வான பகுதியில் அவா் விழுந்துள்ளாா். அப்போது நீரில் மூழ்கி தொழிலாளி சேகா் உயிரிழந்தது புதன்கிழமை காலை தெரியவந்தது.

உயிரிழந்த தொழிலாளி சேகருக்கு மனைவி தமிழ்ச்செல்வி, மகன், 3 மகள்கள் உள்ளனா். இந்த சம்பவம் குறித்து அரூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT