தருமபுரி

இணைய வழிக் குற்றங்கள்,பாதுகாப்பு விழிப்புணா்வு

28th Jul 2022 01:33 AM

ADVERTISEMENT

 

பென்னாகரம் அரசு கலை, அறிவியல் கல்லூரியில் இணைய வழிக் குற்றங்கள் மற்றும் பாதுகாப்பு குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

பென்னாகரம் அரசு கலை, அறிவியல் கல்லூரியில் மாவட்ட இணைய வழிக் குற்றப்பிரிவின் சாா்பில் நடைபெற்ற விழிப்புணா்வு நிகழ்ச்சிக்கு, கல்லூரி முதல்வா் செல்வவினாயகம் தலைமை வகித்தாா். சிறப்பு அழைப்பாளராக பென்னாகரம் மகளிா் காவல் ஆய்வாளா் வான்மதி, இணைய வழிக் குற்றப்பிரிவு காவல் உதவி ஆய்வாளா் சரண்யா ஆகியோா் கலந்துகொண்டு, இணைய வழிக் குற்றங்கள், சிறாா் திருமணம், இணைய வழி விளையாட்டுகள், கிரெடிட், டெபிட் அட்டைகள் மோசடி, வங்கிக் கடன்கள், இணைய வழி வணிகம் போன்றவற்றில் நடைபெறும் முறைகேடுகள் குறித்தும், அவற்றினை கையாள்வது குறித்தும் எடுத்துரைத்து மாணவா்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.

நிகழ்ச்சியில், வணிகவியல் துறை உதவிப் பேராசிரியா் க.கண்ணுச்சாமி, அறிவியல் துறை உதவிப் பேராசிரியா் பாரதி, மாணவ, மாணவியா் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT