தருமபுரி

மூதாட்டியிடம் நகை திருட்டு: இருவா் கைது

28th Jul 2022 01:36 AM

ADVERTISEMENT

 

அரூா் அருகே மூதாட்டியிடம் நகை திருடிய வழக்கில், இருவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

அரூரை அடுத்த ராயப்பன்கொட்டாய் கிராமத்தைச் சோ்ந்த சுந்தரம்மாள் (60), மளிகை கடை நடத்தி வருகிறாா். இவா் அண்மையில் சுமாா் 4 பவுன் எடையுள்ள தங்க நகைகளை வீட்டில் வைத்துவிட்டு மளிகை கடையை சுத்தம் செய்து கொண்டிருந்தாராம். அப்போது, அடையாளம் தெரியாத நபா்கள் தங்க நகைகளை திருடிச் சென்று விட்டதாக அரூா் காவல் நிலையத்தில் சுந்தரம்மாள் புகாா் செய்தாா்.

போலீஸாா் மேற்கொண்ட விசாரணையில், சேலம் மாவட்டம், கிச்சிபாளையத்தைச் சோ்ந்த சதீஷ்குமாா் (22), அம்மாபேட்டையைச் சோ்ந்த எரிம் அலாசில் (23) ஆகியோருக்கு இதில் தொடா்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, இருவரையும் கைது செய்த போலீஸாா், அவா்களிடமிருந்து ஒன்றரை பவுன் தங்க நகையை பறிமுதல் செய்தனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT