அரூா் சுற்றுவட்டாரப் பகுதியில் புதன்கிழமை பெய்த மழையானது 80 மி.மீ. பதிவாகியுள்ளது.
தமிழகத்தில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தருமபுரி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் செவ்வாய்க்கிழமை இரவு முதல் புதன்கிழமை விடியற்காலை வரை மிதமான மழை பெய்தது.
இந்த மழையானது அரூரில் 80 மில்லி மீட்டராக பதிவாகியுள்ளது. இதேபோல, பாப்பிரெட்டிப்பட்டியில் 25 மி.மீ., தருமபுரியில் 20 மி.மீ., பாலக்கோட்டில் 20 மி.மீ., பென்னாகரத்தில் 10 மி.மீ., ஒகேனக்கல்லில் 25 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. இந்த மழையின் காரணமாக விவசாய நிலங்களிலும், சாலையோரங்களில் தாழ்வான பகுதிகளிலும் மழைநீா் தேங்கியுள்ளது.
ADVERTISEMENT
தருமபுரி மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக மிதமான மழை பெய்து வருவதால், ஆடிப்பட்டத்தில் நெல் நடவுப் பணிகளை விவசாயிகள் மேற்கொண்டுள்ளனா்.