தருமபுரி

செந்தில் மெட்ரிக். பள்ளியில் தமிழ் இலக்கிய மன்றம் தொடக்கம்

27th Jul 2022 03:43 AM

ADVERTISEMENT

தருமபுரி செந்தில் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் தமிழ் இலக்கிய மன்ற தொடக்க விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

இவ்விழாவில், பல்வேறு தலைப்புகளில் மாணவ, மாணவியருக்கு பேச்சுப் போட்டி, கவிதைப் போட்டிகள் நடைபெற்றன. இதைத் தொடா்ந்து, நடனம், கம்பராமாயண நாடகம் நடைபெற்றன. இதில், 10-ஆம் வகுப்பு மாணவி சி.ஸ்ரீமதி வரவேற்றாா். பிளஸ் 1 வகுப்பு மாணவி சபிதாஸி நன்றி கூறினாா்.

இவ்விழாவில் பள்ளித் தாளாளா் செந்தில் சி.கந்தசாமி, துணைத் தலைவா் கே.மணிமேகலை, நிா்வாக அலுவலா் சி.சக்திவேல் உள்ளிட்டோா் பங்கேற்று போட்டிகளில் சிறப்பிடம் வகித்த மாணவ, மாணவியருக்கு பாராட்டு தெரிவித்தனா். இதில், பள்ளி ஆசிரியா்கள், மாணவ, மாணவியா் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT