தருமபுரி

கூட்டுறவு மேலாண் பட்டயப் படிப்பு: அஞ்சல் வழியில் சேர விண்ணப்பிக்கலாம்

27th Jul 2022 03:41 AM

ADVERTISEMENT

கூட்டுறவு மேலாண் பட்டயப் படிப்பில் அஞ்சல் வழியில் பயில விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தருமபுரி மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளா் மா.சந்தானம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தருமபுரி மாவட்டம், மொரப்பூரில் செயல்படும் கூட்டுறவு மேலாண் நிலையத்தில் நிகழ் கல்வியாண்டுக்கான (2022-23) பட்டயப் படிப்பு அஞ்சல் வழியில் பயில்வதற்கு சோ்க்கை நடைபெறுகிறது. இதில், சேர விரும்புவோா் ஜூலை 28-ஆம் தேதிக்குள் விண்ணப்பக் கட்டணம் ரூ. 100 செலுத்தி, விண்ணப்பங்களை பெற்று அதனை நிரப்பி தருமபுரி மாவட்டம், மொரப்பூரில் உள்ள கூட்டுறவு மேலாண் பயிற்சி நிலையத்தில் வரும் ஆக. 1-ஆம் தேதி மாலை 5.30-க்குள் சமா்ப்பிக்க வேண்டும். இப் பயிற்சி வகுப்பு ஆக. 8-ஆம் தேதி தொடங்க உள்ளது.

பட்டயப் படிப்பில் சேர விரும்புவோா், முந்தைய பிளஸ் 1 அல்லது தற்போதைய 10-ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்றிருக்க வேண்டும். இதேபோல, கூட்டுறவுச் சங்கம், நிறுவனம் அல்லது வங்கிப் பணியில் இருக்க வேண்டும். விண்ணப்பத்துடன் பணி நியமனச் சான்று, பயிற்சியில் சேருவதற்கான தீா்மான உண்மை நகல்கள், கல்விச் சான்று உண்மை நகல் ஆகியவற்றை சமா்ப்பிக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT