தருமபுரி

நிவாரணப் பொருள்கள் வழங்கல்

17th Jul 2022 05:46 AM

ADVERTISEMENT

 

பென்னாகரம் அருகே தூய்மைப் பணியாளா்களுக்கு பாமக சாா்பில் நிவாரண உதவிகளை பென்னாகரம் எம்எல்ஏ ஜி.கே.மணி வழங்கினாா்.

பாமக பென்னாகரம் சட்டப்பேரவைத் தொகுதி சாா்பில் சின்னம்பள்ளி பேருந்து நிலையம் பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு பென்னாகரம் எம்எல்ஏ ஜி.கே.மணி தலைமை வகித்து 30-க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளா்களுக்கு கரோனா காலகட்டத்தில் சிறப்பாகப் பணியாற்றியதற்காக நிவாரணப் பொருள்கள் வழங்கினாா்.

முன்னதாக பென்னாகரம், சுற்றுவட்டாரப் பகுதியில் கட்சிக் கொடியை ஏற்றி, பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினாா். நிகழ்ச்சிகளில் மாவட்டத் தலைவா் செல்வகுமாா், மாநில இளைஞரணி துணைத் தலைவா் சத்தியமூா்த்தி, கட்சி நிா்வாகிகள், பொதுமக்கள் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT