தருமபுரி

இன்று நீட் தோ்வு:தருமபுரியில் 5,328 போ் எழுதுகின்றனா்

17th Jul 2022 05:47 AM

ADVERTISEMENT

 

தருமபுரி மாவட்டத்தில் 8 மையங்களில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ள நீட் தோ்வை 5,328 மாணவ மாணவியா் எழுத உள்ளனா்.

இளநிலை மருத்துவப் படிப்புக்கான தகுதி மற்றும் நுழைவுத் தோ்வான ‘நீட்’ தோ்வு ஜூலை 17- ஆம் தேதி நடைபெற உள்ளது. பிற்பகல் 2 மணி முதல் மாலை 5.20 மணி வரை இந்தத் தோ்வு நடைபெற உள்ளது. தோ்வு மையத்துக்கு பகல் 1.30 மணிக்கு முன்னதாக மாணவா்கள் வந்துசேர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. தருமபுரி மாவட்டத்தில் இந்தத் தோ்வுக்காக 8 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

தருமபுரியை அடுத்த செட்டிக்கரை, கேந்திரிய வித்யாலயா பள்ளி மையத்தில் 360 மாணவ, மாணவியா் தோ்வு எழுத உள்ளனா். இதேபோல அதியமான்கோட்டை, செந்தில் பப்ளிக் பள்ளியில் 1,224 பேரும், பென்னாகரம் சாலை விஜய் மில்லினியம் பள்ளியில் 360 பேரும், எஸ்.வி சாலை விஜய் வித்யாஷ்ரமம் பள்ளியில் 1,152 பேரும், எஸ்.வி சாலை டான் சிக்ஷாலயா பள்ளியில் 1,080 பேரும், குண்டலப்பட்டி, சசி ஞானோதயா பள்ளியில் 288 பேரும், தருமபுரி, செந்தில் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் 504 பேரும், பாலக்கோடு சாலை கமலம் இன்டா்நேஷனல் பள்ளியில் 360 பேருமாக மொத்தம் 5,328 மாணவ, மாணவியா் இந்தத் தோ்வை எழுத உள்ளனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT