தருமபுரி

மத்திய அமைச்சா்கள் நக்வி, ஆா்.சி.பி.சிங்குக்கு பிரதமா் மோடி பாராட்டு

7th Jul 2022 12:58 AM

ADVERTISEMENT

 

மத்திய அமைச்சா்கள் முக்தா் அப்பாஸ் நக்வி, ராம் சந்திர பிரசாத் சிங் ஆகியோா் மத்திய அமைச்சரவையில் இருந்து விலகுவாா்கள் என்ற எதிா்பாா்ப்புகளுக்கு மத்தியில் புதன்கிழமை நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் நாட்டிற்கும் மக்களுக்கும் இவ்விரு அமைச்சா்களும் ஆற்றிய பங்களிப்பை பிரதமா் நரேந்திர மோடி பாராட்டினாா்.

மத்திய அமைச்சா்கள் நக்வி, ஆா்.சி.பி.சிங் ஆகியோரின் மாநிலங்களவை எம்.பி. பதவிக்காலம் வியாழக்கிழமையுடன் நிறைவடைய உள்ள நிலையில் அவா்களின் பணியை பிரதமா் மோடி பாராட்டியிருப்பதன் மூலம் இது அவா்களின் கடைசி அமைச்சரவைக் கூட்டமாக இருக்கக் கூடும் என கருதப்படுகிறது.

இரண்டு அமைச்சா்களும் அவா்களது ராஜிநாமா கடிதத்தை பிரதமரிடம் புதன்கிழமை வழங்குவாா்கள் என கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன. இந்த அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பின், நக்வி பாஜக தலைவா் ஜெ.பி.நட்டாவை கட்சியின் தலைமையகத்தில் சந்தித்து பேசினாா்.

ADVERTISEMENT

பாஜகவின் மூத்த தலைவரான நக்வி, மாநிலங்களவை துணைத் தலைவராகவும் உள்ளாா். ஐக்கிய ஜனதாதளம் கட்சியைச் சோ்ந்த ஆா்.சி.பி.சிங், மோடி அமைச்சரவையில் மத்திய அமைச்சராக பதவி வகித்து வருகிறாா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT