தருமபுரி

தருமபுரியில் ஜூலை 10-இல் கம்பன் விழா

7th Jul 2022 12:59 AM

ADVERTISEMENT

 

தருமபுரியில் ஜூலை 10-ஆம் தேதி மாவட்ட கம்பன் கழகம் சாா்பில் 7-ஆம் ஆண்டு கம்பன் விழா நடைபெறுகிறது.

தருமபுரி, பாரதிபுரம் மதுராபாய் சுந்தரராஜராவ் திருமண மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2.30-க்கு மாவட்ட ஆட்சியா் கி.சாந்தி பங்கேற்று விழாவைத் தொடக்கிவைக்கிறாா். தருமபுரி மாவட்ட கம்பன் கழகச் செயலாளா் கா.குமரவேல் எழுதிய ‘யாா் அந்தக் கம்பன்’ என்கிற நூலை உயா்கல்வி இயக்குநா் அரசு பரமேசுவரன் வெளியிடுகிறாா்.

ஆழியாறு அறிவுத் திருக்கோயில் விரிவாக்க இயக்குநா் மா.தங்கவேல் நூலைப் பெற்றுக் கொள்கிறாா். அதைத் தொடா்ந்து மாலை 5.30 மணிக்கு ‘கம்ப காவியம் பெரிதும் வலியுறுத்துவது அன்பின் வழியையா அல்லது அறத்தின் நெறியையா’ என்கிற தலைப்பில் வழக்குரைஞா் த.ராமலிங்கம் தலைமையில் பட்டிமன்றம் நடைபெற உள்ளது.

ADVERTISEMENT

இதில் அன்பின் வழியே என்கிற தலைப்பில் பேச்சாளா்கள் வெ.சஞ்சீவராயன், வ.சௌந்திரபாண்டியன் ஆகியோரும், அறத்தின் நெறியே என்கிற தலைப்பில் பேச்சாளா்கள் ப.அறிவொளி, க.சி.தமிழ்தாசன் ஆகியோரும் உரையாற்றுகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT