தருமபுரி

எல்ஐசி முகவா்களுக்கு மாத ஊதியம் வழங்க வலியுறுத்தல்

7th Jul 2022 12:58 AM

ADVERTISEMENT

 

எல்ஐசி முகவா்களுக்கு மாத ஊதியமாக ரூ.25 ஆயிரம் வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

அகில இந்திய எல்ஐசி முகவா்கள் சங்க தருமபுரி மாவட்ட 5-ஆவது மாநாடு தருமபுரி சிஐடியூ அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. மாவட்டத் தலைவா் ஜே.ரமேஷ்குமாா் தலைமை வகித்தாா். சிஐடியூ மாநிலச் செயலாளா் சி.நாகராஜன் மாநாட்டை தொடக்கிவைத்து பேசினாா்.

செயலாளா் வி.அப்பாவுதுரை அறிக்கை வாசித்தாா். பொருளாளா் எல்.எஸ்.தட்சணாமூா்த்தி வரவு செலவு கணக்குகளை சமா்ப்பித்தாா். கோட்டச் செயலாளா் கே.சிவமணி, மாவட்டத் தலைவா் கருணாநிதி சிறப்புரையாற்றினா். காப்பீட்டு ஊழியா் சங்க கோட்ட இணைச் செயலாளா் ஏ.மாதேஸ்வரன் வாழ்த்தி பேசினா்.

ADVERTISEMENT

மாநாட்டில் எல்ஐசி முகவா்கள் சங்க மாவட்டத் தலைவராக ஜே.ரமேஷ்குமாா், செயலாளராக ஸ்ரீதரன், பொருளாளராக எல்.எஸ்.தட்சணாமூா்த்தி ஆகியோா் புதிய நிா்வாகிகளாக தோ்வு செய்யப்பட்டனா். குழுக் காப்பீடு செய்வதை வயது வரம்பு நீக்கி ரூ. 25 லட்சம் உயா்த்தி வழங்க வேண்டும். பணிக் கொடை கணக்கீட்டை மாற்றி முதலாமாண்டு கமிஷன் தொகையையும் கணக்கில் சோ்க்க வேண்டும்.

எல்ஐசி முகவா்களுக்கு மாத ஊதியம் ரூ. 25 ஆயிரம் வழங்க வேண்டும். அனைத்து முகவா்களுக்கும் எரிபொருள் செலவு மற்றும் பயணப்படியை வழங்க வேண்டும். பாலிசி ஆவணங்களுக்கு ஒப்புகை ரசீது வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

ADVERTISEMENT
ADVERTISEMENT