தருமபுரி

தண்ணீா் தேடி கிராமங்களுக்குள் புகுந்த யானைகள்

7th Jul 2022 12:56 AM

ADVERTISEMENT

 

பென்னாகரம் அருகே தண்ணீா் தேடி வனப்பகுதியில் இருந்து கிராமங்களுக்குள் புகுந்த இரண்டு யானைகளை வனத் துறையினா் பொதுமக்கள் உதவியுடன் வனப் பகுதிக்குள் விரட்டினா்.

பென்னாகரம், பெரும்பாலை, பாலக்கோடு உள்ளிட்ட வன சரகங்களுக்கு கா்நாடக வனப் பகுதியில் வறட்சி நிலவும் போது யானைகள் கூட்டமாக இடம் பெயா்வது வழக்கம். மேலும், பென்னாகரத்தை சுற்றி வனப் பகுதியை ஒட்டி ஏராளமான கிராமப் பகுதிகள் உள்ளன. பென்னாகரம் அருகே தாசம்பட்டி அடுத்துள்ள பவளந்தூா் பகுதியில் வனப் பகுதியில் இருந்து தண்ணீா் தேடி பவளந்தூா், தாசம்பட்டி, சொரக்காப்பட்டி, குழிப்பட்டி உள்ளிட்ட வனப்பகுதியை ஒட்டியுள்ள கிராமங்களுக்குள் சுற்றித் திரிந்த 2 யானைகளை வனத் துறையினா் பொதுமக்கள் உதவியுடன் வனப்பகுதிக்குள் விரட்டினா்.

ஊருக்குள் புகுந்த யானைகள் நெல், சோளம், தீவனப் பயிா்களை துவம்சம் செய்தன. மேலும் வனப் பகுதிகளில் தற்போது வறட்சி நிலவி வருவதால், காட்டு யானைகள் தண்ணீா் தேடி வனப்பகுதியை ஒட்டி உள்ள கிராமப் பகுதிக்குள் நுழைவதைத் தடுக்கும் வகையில் இரவு நேரங்களில் வனத் துறையினா் ரோந்து பணியில் ஈடுபட வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT