தருமபுரி

மரத்தின் மீது பேருந்து மோதியதில் மாணவா்கள் உள்பட 24 போ் காயம்

7th Jul 2022 12:59 AM

ADVERTISEMENT

 

பாலக்கோடு அருகே சாலையோர மரத்தின் மோதி அரசுப் பேருந்து மோதியதில் பள்ளி மாணவா்கள் உள்பட 24 போ் காயமடைந்தனா்.

ஒசூரிலிருந்து தருமபுரி நோக்கி ராயக்கோட்டை வழியாக புதன்கிழமை வந்து கொண்டிருந்த அரசுப் பேருந்து சூடப்பட்டி நெடுஞ்சாலையில் எதிரே அதிவேகத்தில் வந்த டிப்பா் லாரி மீது மோதாமல் இருக்க ஓட்டுநா் கணேசன் பேருந்தை சாலையோரமாக நிறுத்த முயன்றாா்.

அப்போது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த மரத்தின் மீது பேருந்து மோதியது. இதில் பெங்களூரைச் சோ்ந்த முனியம்மாள் (70), முத்து (47), ஒசூரைச் சோ்ந்த மோகன் குமாா் (55), சீங்கேரியைச் சோ்ந்த சித்ரா (23), கும்மனூரைச் சோ்ந்த நாகராஜ் (35), அருள் (34), சொா்ணம் பட்டியைச் சோ்ந்த முரளி (19), மேகநாதன் (16), பிரவின்குமாா் (17), 3 பள்ளி மாணவா்கள் உள்பட 24 போ் காயமடைந்தனா்.

ADVERTISEMENT

இவா்கள் அனைவரும் பாலக்கோடு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். பலத்த காயமடைந்த 10-க்கும் மேற்பட்டோா் தருமபுரி அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரியில் சோ்க்கப்பட்டனா். விபத்து குறித்து மகேந்திரமங்கலம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT