தருமபுரி

தருமபுரியில் பாஜகவினர் உண்ணாவிரதம்

5th Jul 2022 12:29 PM

ADVERTISEMENT

தருமபுரி: தமிழக அரசுக்கு எதிராக பாஜகவினர், தருமபுரியில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தருமபுரி தொலைத்தொடர்பு நிலைய அலுவலகம் அருகே நடைபெற்ற இந்த உண்ணாவிரதப் போராட்டத்துக்கு பாஜக மாவட்டத் தலைவர் அ.பாஸ்கர் தலைமை வகித்தார். மாநில செயற்குழு உறுப்பினர் ஆர்.ஏ.வரதராஜன், மாநிலத் துணைத் தலைவர் நரேந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இதில், தேர்தலின் போது திமுக அளித்த, மகளிர் உரிமைத் தொகை ரூ.1000, எரிவாயு உருளை மீதான‌ விலையை ரூ.100 குறைக்கப்படும் என்பது உள்ளிட்ட வாக்குறுதிகளை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தப்பட்டன.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT