தருமபுரி

மீன் விற்பனை நிலையங்களில் ஆய்வு:4 கடைகளுக்கு அபராதம்

5th Jul 2022 02:58 AM

ADVERTISEMENT

தருமபுரி நகரில் மீன் விற்பனை நிலையங்களில் உணவு பாதுகாப்புத் துறையினா் ஆய்வு மேற்கொண்டு அழுகிய மீன்களை விற்பனை செய்த நான்கு கடைகளுக்கு அபராதம் விதித்தனா்.

தருமபுரி மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலா் ஏ.பானு சுஜாதா மற்றும் உணவு பாதுகாப்புத் துறை அலுவலா்கள் தருமபுரி நகரில் சந்தைப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மீன் மொத்த மற்றும் சில்லரை விற்பனை நிலையங்களில் ஆய்வு மேற்கொண்டனா்.

இந்த ஆய்வின்போது, நான்கு கடைகளில் அழுகிய மீன்கள் விற்பனை செய்தது தெரியவந்தது. இதைத் தொடா்ந்து, அக் கடைகளுக்கு ரூ. 5,000 அபராதம் விதிக்கப்பட்டது. மேலும், சுமாா் 70 கிலோ எடை கொண்ட அழுகிப்போன மீன்கள் பறிமுதல் செய்து அழிக்கப்பட்டது.

இந்த ஆய்வின்போது, மீன் வளத்துறை உதவி இயக்குநா் கோகுல ரமணன், வட்டார உணவு பாதுகாப்பு அலுவலா்கள் நந்தகோபால், குமணன் ஆகியோா் உடனிருந்தனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT