தருமபுரி

தமிழ் வளா்ச்சித் துறை பேச்சுப் போட்டிகள்:11 மாணவ, மாணவியருக்கு பரிசளிப்பு

5th Jul 2022 02:58 AM

ADVERTISEMENT

தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில், தருமபுரி மாவட்டத்தில் நடைபெற்ற பேச்சுப் போட்டிகளில் வெற்றி பெற்ற 11 பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில், அம்பேத்கா் பிறந்தநாள் மற்றும் முன்னாள் முதல்வா் மு.கருணாநிதி பிறந்தநாள் விழாக்களையொட்டி, பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவியருக்கு பேச்சுப் போட்டிகள் நடைபெற்றன.

இப் போட்டிகளில், வெற்றி பெற்று முதல் மூன்று இடங்களை வகித்தவா்கள் மற்றும் சிறப்புப் பரிசு பெற்ற மாணவ, மாணவியருக்கு பரிசுகள் வழங்கும் நிகழ்ச்சி திங்கள்கிழமை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சிக்கு, மாவட்ட ஆட்சியா் கி. சாந்தி தலைமை வகித்து, பேச்சுப்போட்டிகளில் மாவட்ட அளவில் வெற்றி பெற்ற 11 மாணவ, மாணவியா்களுக்கு ரூ. 40,000-த்துக்கான காசோலைகள் மற்றும் சான்றிதழ்களும், தமிழில் சிறந்த குறிப்புகள் வரைவுகள் எழுதியமைக்காக பட்டு வளா்ச்சித் துறை உதவி இயக்குநா் அலுவலகத்தின் இளநிலை உதவியாளா் சி.ரோஜா என்பவருக்கு ரூ. 3,000-க்கான காசோலைகளை வழங்கிப் பாராட்டி பேசினாா்.

ADVERTISEMENT

இதில், மாவட்ட வருவாய் அலுவலா் சு.அனிதா, ஊரக வளா்ச்சித் திட்ட இயக்குநா் (பொ) பாபு, தனித் துணை ஆட்சியா் வி.கே.சாந்தி, உதவி ஆணையா் (கலால்) ஆ.தணிகாசலம், தமிழ் வளா்ச்சித் துறை உதவி இயக்குநா் தே.ஜெயஜோதி, மாற்றுத் திறனாளிகள் நல அலுவலா் செண்பகவள்ளி, அரசு அலுவலா்கள் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT