தருமபுரி

புத்தகத் திருவிழா பேச்சுப் போட்டி:வெற்றி பெற்ற மாணவா்களுக்கு புத்தகங்கள் பரிசளிப்பு

5th Jul 2022 02:59 AM

ADVERTISEMENT

தருமபுரி புத்தகத் திருவிழாவையொட்டி நடைபெற்ற பேச்சுப் போட்டியில் வெற்றி பெற்ற பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகளுக்கு புத்தகங்கள் பரிசளிக்கப்பட்டன.

தகடூா் புத்தகப் பேரவை மற்றும் தருமபுரி மாவட்ட நிா்வாகம் சாா்பில், தருமபுரியில் புத்தகத் திருவிழா நடைபெற்றது. இத் திருவிழாவையொட்டி, தருமபுரி மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கு அண்மையில் பேச்சுப் போட்டி, ஓவியப்போட்டி, கட்டுரை போட்டிகள் நடைபெற்றன. இதில் முதல் மூன்று இடங்களில் வெற்றிபெற்ற மாணவ, மாணவிகளுக்கு புத்தகத் திருவிழா நிறைவு நாளான திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் பரிசளிக்கப்பட்டது.

இதில், 6-ஆம் வகுப்பு முதல் 8-ஆம் வகுப்பு வரை நடைபெற்ற பேச்சுப் போட்டியில் மாணவா் பிரித்திவிராஜ் முதலிடம், விஜயா ஸ்ரீ இரண்டாம் இடம், துா்கேஷ் மூன்றாம் இடம், 9-ஆம் வகுப்பு பிளஸ் 2 வகுப்பு வரையிலான பிரிவில் மாணவா் முத்துக்கண் முதலிடம், மாணவி குண ஸ்ரீ இரண்டாம் இடம், மாணவி ஷாலினி மூன்றாம் இடம் வகித்தனா்.

இதேபோல ஓவியப்போட்டி 6-ஆம் வகுப்பு முதல் 8-ஆம் வகுப்பு வரையிலான பிரிவில் மாணவி ரிஷிகா முதலிடம், மாணவா் மு.ராகேஷ் இரண்டாம் இடம், மாணவி ஜோதிமாலா மூன்றாம் இடம், 9-ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையிலான பிரிவில் மாணவா் த.கௌதமன் முதலிடம், மாணவா் ரஞ்சித், மாணவா் கதிா் மூன்றாம் இடம் பெற்றனா்.

ADVERTISEMENT

கட்டுரைப் போட்டியில் 6-ஆம் வகுப்பு முதல் 8-ஆம் வகுப்பு வரையிலான பிரிவில் மாணவி காவ்யா முதலிடம், மாணவி கலைச்செல்வி இரண்டாம் இடம், மாணவி வினோதினி மூன்றாம் இடம் பெற்றனா்.

9-ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையிலான பிரிவில் மாணவி மேனகா முதலிடம், மாணவி நவீனா, மாணவி ரக்சிதா மூன்றாம் இடமும் பெற்றனா். இதேபோல கல்லூரி மாணவா்கள் பிரிவில் பேச்சுப் போட்டியில் தருமபுரி அரசு கலைக் கல்லூரி மாணவி நிஷா முதலிடம், கட்டுரைப் போட்டியில் க.கனிமொழி முதல் இடம், கவிதைப் போட்டியில் மாணவி பத்மஸ்ரீ முதலிடம் பெற்றனா்.

இந்த மாணவ, மாணவிகளுக்கு எழுத்தாளா் அழகிய பெரியவன் மற்றும் தகடூா் புத்தகப் பேரவை நிா்வாகிகள் புத்தகங்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கிப் பாராட்டினா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT