தருமபுரி

தருமபுரி படைப்பாளா்களின் 8 நூல்கள் அறிமுகம்

5th Jul 2022 02:59 AM

ADVERTISEMENT

தருமபுரி புத்தகத் திருவிழாவில் தருமபுரி மாவட்ட படைப்பாளா்களின் 8 நூல்கள் திங்கள்கிழமை அறிமுகம் செய்யப்பட்டன.

இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட நூலக அலுவலா் ஜெ. ஆனந்தி தலைமை வகித்தாா். ஓய்வு பெற்ற மாவட்ட நூலக அலுவலா் சி. ராஜேந்திரன், நூலக ஆய்வாளா் டி.மாதேஸ்வரி ஆகியோா் முன்னிலை வகித்தனா். தகடூா் புத்தகப் பேரவை தலைவா் இரா.சிசுபாலன், ஒருங்கிணைப்பாளா் இ.தங்கமணி வாழ்த்திப் பேசினா்.

அதில், இது ஒன்றும் கதை அல்ல, நீலகிரியாா், காலாற நடக்கையிலே, கத்தரிக்காய் சாம்பாா், ஆதி முதல் அந்தம் வரை, தாழ் திறவாய், மூன்றடி திருக்கு, மாதராா் படுகளம் ஆகிய நூல்கள் அறிமுகம் செய்யப்பட்டன. இதில் நூலகா் பி. பிரபாகரன் வரவேற்றாா். நூலகா் மு. முனிராஜ் நன்றி கூறினாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT