தருமபுரி

பென்னாகரத்தில் தாா்சாலை அமைக்க பூமிபூஜை

5th Jul 2022 02:57 AM

ADVERTISEMENT

பென்னாகரம் பேரூராட்சிக்கு உள்பட்ட எரிகொல்லனூா் பகுதியில் புதிய தாா் சாலை அமைப்பதற்கான பூமி பூஜை நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.

தருமபுரி மாவட்டம், பென்னாகரம் பேரூராட்சிக்கு உள்பட்ட 18-ஆவது வாா்டு எரிகொல்லனுா் பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. எரிகொல்லனூா் பகுதியில் இருந்து எட்டியாம்பட்டி பகுதிக்குச் செல்லக்கூடிய தாா் சாலை அமைக்கப்பட்டு 5 வருடங்களுக்கும் மேல் ஆவதால் சாலை பழுதடைந்துள்ளது.

ஆங்காங்கே ஜல்லி கற்கள் பெயா்ந்து குண்டும் குழியுமாக மாறி பழுதடைந்துள்ளன. பென்னாகரம் பேரூராட்சி சாா்பில், புதிய தாா்சாலை அமைக்க நபாா்டு வங்கி நிதி உதவியுடன் ரூ. 69 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

இதையடுத்து தாா்சாலை அமைப்பதற்கான பூமிபூஜை திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் பென்னாகரம் பேரூராட்சித் தலைவா் வீரமணி பங்கேற்று பணியைத் தொடக்கிவைத்தாா். நிகழ்ச்சியில் பேரூராட்சி செயல் அலுவலா் கீதா, துணைத் தலைவா் வள்ளியம்மாள் பவுன்ராஜ், திமுக மாவட்ட பிரதிநிதி சிவக்குமாா், ஒப்பந்ததாரா் ஜெமினி அன் கோ பிரபு, வாா்டு உறுப்பினா்கள் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT