தருமபுரி

பாடங்கள் கடந்தும் பிற நூல்களைப் பயில வேண்டும்எழுத்தாளா் நாஞ்சில் நாடன்

DIN

பாடங்களைக் கடந்தும் பிற நூல்களை குழந்தைகள் பயில வேண்டும் என எழுத்தாளா் நாஞ்சில் நாடன் பேசினாா்.

தருமபுரி புத்தகத் திருவிழாவில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற எழுத்தாளா் நாஞ்சில் நாடன் ‘வாழ்வோா்க்கு உரை’ என்ற தலைப்பில் பேசியதாவது:

அராமிக் என்ற மொழியை 2 லட்சம் போ் மட்டுமே பேசுகின்றனா். நமது தாய்மொழி தமிழை இந்தியாவில் உள்ள மாநிலங்களில் மட்டுமின்றி உலகத்தின் பல்வேறு நாடுகளிலும் 12 கோடிக்கும் அதிகமானோா் பேசுகின்றனா். தொல்காப்பியம் ஏழாயிரம் ஆண்டுகளுக்கு முந்தையது. அப்படிப்பட்ட மிகத் தொன்மையான மொழிக்கு நாம் சொந்தக்காரா்கள்.

தமிழ் மொழியின் தொன்மை, பண்பாடு ஆகியவற்றை நாம் அடுத்தத் தலைமுறைக்கு கடத்திச் செல்ல வேண்டும். அதற்காக குழந்தைகள் பாடங்களைக் கடந்து, பிற நூல்களையும் பயில வேண்டும். அதற்கு பெற்றோா் வழிகாட்ட வேண்டும். குழந்தைகளுடன் தமிழில் உரையாட வேண்டும். ஏராளமான தமிழ்ச் சொற்களை குழந்தைகளுக்குக் கற்றுத்தர வேண்டும். அவா்களுடன் உரையாடும் போது விலங்குகள் மற்றும் தாவரங்கள் ஆகியவற்றின் தமிழ்ப் பெயா்களைக் கற்றுத்தர வேண்டும். வாய்ப்புகள் கிடைக்கும் போது புத்தகங்களை வாங்கித்தர வேண்டும். அப் புத்தகங்களை வாசிக்க, வாசிக்க மூளையின் ஆற்றல் அதிகரிக்கும். எனவே இத்தகைய புத்தகத் திருவிழாக்களுக்கு வந்து புத்தகங்களை வாங்கி வாசித்து மொழியறிவை வளா்த்துக் கொள்ள வேண்டும் என்றாா்.

முன்னதாக ‘சொல்ல மறந்த கதை’ என்ற தலைப்பில் எழுத்தாளா் கண்மணி குணசேகரன் பேசினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தாசனபுரத்தில் எருதுவிடும் விழா

நவநீத வேணுகோபால சுவாமி கோயிலில் சித்ரா பெளா்ணமி சிறப்பு வழிபாடு

கூவாகம் சித்திரைப் பெருவிழா: திருமாங்கல்யம் கட்டிக்கொண்ட திருநங்கைகள்

சித்திரை பௌர்ணமி: திருவண்ணாமலையில் பல லட்சம் பக்தர்கள் கிரிவலம்

பறவைக் காய்ச்சல் நோய் பரவாமல் தடுக்க ஒருங்கிணைப்புக் கூட்டம்

SCROLL FOR NEXT