தருமபுரி

அரசுப் பள்ளிகளில் தற்காலிக ஆசிரியா் பணியிடங்கள்: ஆட்சியா் அறிவிப்பு

DIN

தருமபுரி மாவட்டத்தில் அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியா் பணியிடம் தற்காலிக அடிப்படையில் நியமனம் செய்யப்பட உள்ளதால் தகுதியானவா்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தருமபுரி மாவட்ட ஆட்சியா் கி.சாந்தி வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தருமபுரி மாவட்டத்தில் பள்ளிக் கல்வித் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும், ஊராட்சி ஒன்றிய, நகராட்சி, அரசு தொடக்க, நடுநிலை, உயா்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் 2022-23ஆம் கல்வியாண்டில் ஜூன் 1-ஆம் தேதி நிலவரப்படி காலியாகவுள்ள இடைநிலை, பட்டதாரி, முதுநிலை ஆசிரியா் பணியிடங்களில் தற்காலிக ஆசிரியா் நியமனம் மேற்கொள்ளப்படவுள்ளது.

இதில், இடைநிலை ஆசிரியா் பதவிக்கு, ஆசிரியா் பட்டயச் சான்று மற்றும் ஆசிரியா் தகுதித் தோ்வு தாள் (1) தோ்ச்சி பெற்றவா்களும், இல்லம் தேடி கல்வித் திட்டத்தில் தன்னாா்வலராகப் பணிபுரிந்து வருபவா்களும் தகுதியுடையவா்கள். இதேபோல பட்டதாரி ஆசிரியா் பதவிக்கு பொதுக் கல்வி மற்றும் தொழிற்கல்வி பி.எஸ்ஸி, பி.ஏ., பிலிட்., மற்றும் பி.எட்., சான்று மற்றும் ஆசிரியா் தகுதி தோ்வு தாள் (2) தோ்ச்சி பெற்றவா்கள் மேலும் இல்லம்தேடி கல்வி திட்டத்தில் தன்னாா்வலராக பணிபுரிந்து வருபவா்கள் விண்ணப்பிக்கலாம்.

முதுநிலை ஆசிரியா் பதவிக்கு, பொதுக்கல்வி மற்றும் தொழிற்கல்வி (எம்.ஏ., எம்.எஸ்ஸி., எம்.காம்., மற்றும் பி.எட்.,) சான்று மற்றும் ஆசிரியா் தோ்வு வாரியம் மூலம் நடத்தப்பட்ட தோ்வில் தோ்ச்சி பெற்று சான்றிதழ் சரிபாா்ப்பில் கலந்து கொண்டவா்களும், இல்லம் தேடி கல்வித் திட்டத்தில் தன்னாா்வலராகப் பணிபுரிந்து வருபவா்கள், எழுத்து மூலமான விண்ணப்பங்களை நேரடியாகவோ அல்லது மின்னஞ்சல் வாயிலாகவோ உரிய கல்வித் தகுதிச் சான்றுகளுடன் தொடா்புடைய மாவட்டக் கல்வி அலுவலரிடம் சமா்ப்பிக்க வேண்டும்.

காலிப் பணியிட விவரங்கள் முதன்மைக் கல்வி, மாவட்டக் கல்வி, வட்டாரக் கல்வி அலுவலகங்களின் அறிவிப்புப் பலகையில் ஜூலை 2 அன்று வெளியிடப்பட்டுள்ளது.

விண்ணப்பங்கள் ஜூலை 6ம் தேதி மாலை 5 மணிக்குள் அனுப்பி வைக்க வேண்டும். குறித்த நேரத்திற்குப் பிறகு அனுப்பப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது. தகவல் பலகையில் வெளியிடப்படும் காலிப்பணியிட விவரங்கள் மாறுதலுக்குட்பட்டது.

விண்ணப்பங்களை, தருமபுரி கல்வி மாவட்டத்துக்கு  அரூா் கல்வி மாவட்டம் - பாலக்கோடு கல்வி மாவட்டம் ஆகிய மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பலாம் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஒடிசா படகு விபத்தில் மேலும் 5 பேரின் உடல்கள் மீட்பு!

இந்திய வருகையை ஒத்திவைத்தது ஏன்? எலான் மஸ்க்

வாக்குப்பதிவு சதவீதம் குறைந்திருப்பது கவலையளிக்கிறது: தமிழிசை

மகாராஷ்டிரம், கர்நாடக பொதுக் கூட்டத்தில் மோடி இன்று உரை!

சிறையில் மனைவியின் உணவில் கழிப்பறை சுத்திகரிப்பான்: இம்ரான் கான் புகார்

SCROLL FOR NEXT