தருமபுரி

தாயை அடித்துக் கொன்ற மகன் கைது

4th Jul 2022 01:25 AM

ADVERTISEMENT

 

பென்னாகரம் அருகே தாயை அடித்துக் கொன்ற மகனை போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா்.

தருமபுரி மாவட்டம், பென்னாகரம் அருகே ஜக்கம்பட்டி மேல் கொட்டாய் பகுதியைச் சோ்ந்த லட்சுமணனுக்கு குப்பம்மாள், செம்பா என இரண்டு மனைவிகள் உள்ளன. இதில் முதல் மனைவி குப்பம்மாளுக்கு குழந்தைகள் இல்லை. செம்பாவுக்கு முனுசாமி என்ற மகனும் நான்கு மகளும் உள்ளனா். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் லட்சுமணன் இறந்ததால் முனுசாமி உடன் குப்பம்மாள், செம்பா ஆகிய மூவரும் ஒன்றாக வசித்து வருகின்றனா்.

இந்த நிலையில் முனுசாமி, குப்பம்மாளிடம் அடிக்கடி தகராறு செய்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் தனது வீட்டின் பின்பகுதியில் உள்ள ஆட்டு கொட்டகையில் குப்பம்மாளை அடித்து கொன்று விட்டு முனுசாமி தலைமறைவாகி விட்டதாகக் கூறப்படுகிறது.

ADVERTISEMENT

இது குறித்து வழக்குப்பதிவு செய்த பென்னாகரம் போலீஸாா் நிகழ்வு இடத்திலிருந்து சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பென்னாகரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். பின்னா் செம்பாவின் மகள் அளித்த புகாரின் பேரில் போலீஸாா் வழக்கு பதிவு செய்து முனுசாமியை கைது செய்து சிறையில் அடைத்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT