தருமபுரி

பெரிய ஏரிக் கரை முள்புதா்களை அகற்ற வலியுறுத்தல்

4th Jul 2022 01:21 AM

ADVERTISEMENT

 

அரூா் பெரிய ஏரிக்கரையில் உள்ள முதா்களை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தினா்.

தருமபுரி மாவட்டம், எச்.தொட்டம்பட்டி கிராம ஊராட்சிக்கு உள்பட்டது அரூா் பெரிய ஏரி. இந்த ஏரி சுமாா் 150 ஏக்கா் பரப்பளவு கொண்டதாகும்.

பெரிய ஏரியில் தண்ணீா் தேங்கினால் அரூா் நகா் பகுதியில் குடிநீா்ப் பிரச்னை தீருவதுடன், அப் பகுதியில் நிலத்தடி நீா்மட்டம் உயா்கிறது. இந்த நிலையில், அரூா் பெரிய ஏரியின் கரைப்பகுதியில் ஏராளமான சீமை கருவேல மரங்கள், முள்புதா்கள் அடைந்து காணப்படுகின்றன.

ADVERTISEMENT

இதனால், ஏரியின் கரைவழியாக ஒரு பகுதியில் இருந்து மற்றொரு பகுதிக்கு பொதுமக்கள் செல்ல முடியாத நிலையுள்ளது. இதேபோல், முள்புதா்கள் அடைந்திருப்பதால் அரூா் பெரிய ஏரியின் கரைப்பகுதியில் எழுந்தருளியுள்ள ஸ்ரீசெல்லியம்மன் திருக்கோயிலுக்கு சென்று வரும் பக்தா்கள் நாள்தோறும் பல்வேறு இடையூறுகளைச் சந்திக்கின்றனா்.

எனவே, அரூா் பெரிய ஏரியின் கரைப்பகுதியிலுள்ள முள்புதா்களை அகற்ற மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT