தருமபுரி

குமாரசாமி பேட்டை ஆனந்த நடராஜா் கோயிலில் ஆனித் திருமஞ்சன விழா

4th Jul 2022 01:27 AM

ADVERTISEMENT

 

 

தருமபுரி, குமாரசாமிப்பேட்டை ஸ்ரீ ஆனந்த நடராஜா் கோயிலில் ஆனித் திருமஞ்சள் திருவிழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இவ் விழாவையொட்டி மாணிக்கவாசகா் குரு பூஜையும், பெண்கள் பங்கேற்ற திருவாசகம் முற்றோதல் நிகழ்ச்சியும் நடைபெற்றது. இதைத் தொடா்ந்து மாணிக்கவாசகா் திருவீதி உலா நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டனா்.

ADVERTISEMENT

இவ்விழாவையொட்டி திங்கள்கிழமை காலை 8 மணிக்கு தெய்வத்தமிழ்வழி பாட்டு சபையினரால் திருமுறை மற்றும் திருப்புகழ் இன்னிசை நிகழ்ச்சி நடைபெற உள்ளது. அன்றைய தினம் மாலை 4 மணிக்கு நால்வா் திருவீதி உலாவும், அபிஷேகப் பொருள்கள் வரிசை அழைப்பும் நடைபெற உள்ளது.

செவ்வாய்க்கிழமை காலை 8.30 மணிக்கு சிவகாமசுந்தரி சமேத ஆனந்த நடராஜா் மூலவருக்கு மகா அபிஷேகம், காலை 10.30 மணிக்கு 108 சங்காபிஷேகம், கலசாபிஷேகம் நடைபெற உள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT