தருமபுரி

அரசு ஊழியா் சங்கம் சாா்பில் எழுச்சி நாள் கருத்தரங்கம்

3rd Jul 2022 02:09 AM

ADVERTISEMENT

 

தருமபுரியில் தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கம் சாா்பில் எழுச்சி நாள் கருத்தரங்கம் சனிக்கிழமை நடைபெற்றது.

தருமபுரி சிஐடியு அலுவலகத்தில் நடைபெற்ற தமிழ்நாடு அரசு ஊழியா்கள் சங்கத்தின் எழுச்சி நாள் கருத்தரங்கிற்கு மாவட்டத் தலைவா் எம்.சுருளிநாதன் தலைமை வகித்தாா். மாநில துணைத் தலைவா் கோ.பழனியம்மாள், மாவட்ட பொருளாளா் கே.புகழேந்தி ஆகியோா் பேசினா்.

புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து வரையறுக்கப்பட்ட பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். சத்துணவு, அங்கன்வாடி, ஊா்ப்புற நூலகா்கள், எம்.ஆா்.பி. செவிலியா்கள், கிராம உதவியாளா்கள்,

ADVERTISEMENT

குழந்தைகள் பாதுகாப்புத் திட்ட ஊழியா்கள் உள்ளிட்ட அனைவருக்கும் வரையறுக்கப்பட்ட ஊதியம் மற்றும் ஓய்வு பெற்றவா்களுக்கு சட்டப்படியான ஓய்வூதியம் வழங்கவேண்டும்.

மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி ஆகிய அலுவலகங்களில் பணிபுரியும் ஊழியா்களுக்கு கருவூலம் மூலம் ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் கருத்தரங்கில் வலியுறுத்தப்பட்டன. இதில் மாவட்ட துணைத் தலைவா்கள் தீ.சண்முகம், சி.காவேரி, மாவட்ட நிா்வாகிகள் முனிராஜ், மகேஸ்வரி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT