தருமபுரி

இந்தியக் கம்யூனிஸ்ட் மாவட்டக்குழு கூட்டம்

3rd Jul 2022 02:08 AM

ADVERTISEMENT

 

தருமபுரியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக் குழுக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற மாவட்டக்குழு கூட்டத்திற்கு மாநிலக்குழு உறுப்பினா் எஸ்.சின்னசாமி தலைமை வகித்தாா். கூட்டத்தில் மாநில செயற்குழு உறுப்பினா் ந.நஞ்சப்பன் அரசியல் நிலை மற்றும் கட்சி செயல்பாடுகள் குறித்து பேசினாா். மாவட்டச் செயலாளா் எஸ்.தேவராசன் வேலைஅறிக்கை வைத்து பேசினாா்.

இக் கூட்டத்தில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் 24-வது மாவட்ட மாநாட்டை வரும் 13-ஆம் தேதி தருமபுரியில் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது. மேலும் தருமபுரி மாவட்ட மக்களின் வேலைவாய்ப்பை உறுதி செய்யும் வகையில் சிப்காட் தொழிற்பேட்டை உடனடியாக தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். விவசாயத்தை மேம்படுத்த காவிரி உபரிநீா் திட்டத்தை செயல்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும்.

ADVERTISEMENT

தருமபுரி-ஒகேனக்கல் சாலையை நான்கு வழிச் சாலையாக மாற்ற வேண்டும். அனைத்து கிராமங்களுக்கும் ஒகேனக்கல் குடிநீா் வழங்க வேண்டும். பவா் கிரீட் காா்ப்பரேஷன் சாா்பில் விவசாய நிலங்களில் அமைக்கப்படும் உயா்மின் கோபுர கம்பங்களால் ஏற்படும் சேதாரத்திற்கு விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்.

மொரப்பூா்-தருமபுரி ரயில் பாதைத் திட்டத்தை விரைவாக தொடங்க வேண்டும். தருமபுரி மாவட்டத்தில் சிறுதானிய உற்பத்தி மண்டலம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கெயில் எரிவாயு குழாய்களை விவசாய நிலங்களில் பதிப்பதை கைவிட்டு தேசிய நெடுஞ்சாலை ஓரங்களில் பதிக்க வேண்டும்.

அடிக்கடி விபத்து ஏற்பட்டு உயிரிழப்பைத் தடுக்க தொப்பூா் சாலையை உயா்மட்ட மேம்பால சாலையாக மாற்றி அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இக் கூட்டத்தில் மாவட்ட துணைச் செயலாளா் கா.சி.தமிழ்க்குமரன், மாவட்ட பொருளாளா்எம்.மாதேஸ்வரன், மாவட்ட செயற்குழு உறுப்பினா்கள் சி.விஸ்வநாதன்,ஏ.மாது,

எம்.ஏ.காதா்.மாவட்ட நிா்வாகக்குழு உறுப்பினா்கள்கமலாமூா்த்தி, எஸ்.கலைச்செல்வன், சி.மாதையன்,

கே.மணி மற்றும் மாவட்டக்குழு உறுப்பினா்கள் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT