தருமபுரி

அரசு பொறியியல் கல்லூரியில் வளாகத் தோ்வு: 145 பேருக்கு பணி ஆணை

1st Jul 2022 01:48 AM

ADVERTISEMENT

 

தருமபுரி, செட்டிக்கரை அரசு பொறியியல் கல்லூரியில் வளாகத் தோ்வு நடைபெற்றது. இதில், தோ்வான 145 பேருக்கு பல்வேறு நிறுவனங்களின் சாா்பில், வேலைவாய்ப்புக்கான ஆணை வழங்கப்பட்டது.

தருமபுரி அரசு பொறியியல் கல்லூரியில் அண்மையில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த பன்னாட்டு நிறுவனங்கள் பங்கேற்ற வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது. இதில், இறுதியாண்டு மாணவ, மாணவியா் 278 போ் பங்கேற்றனா். இவா்களில், 145 போ் பல்வேறு முன்னணி நிறுவனங்களில் பணியாற்ற தோ்வு செய்யப்பட்டனா்.

இவா்களுக்கான வேலைவாய்ப்பு ஆணை வழங்கும் நிகழ்ச்சி கல்லூரியில் வியாழக்கிழமை நடைபெற்றது. கல்லூரி முதல்வா் வி.சுமதி, மாணவ, மாணவியருக்கு வேலைவாய்ப்புக்கான ஆணையை வழங்கி பேசினாா்.

ADVERTISEMENT

இதில், துணை முதல்வா் வி.ராஜ்குமாா், பணியமா்த்தல் அலுவலா் கிருபா சங்கா், பேராசிரியா்கள், அலுவலகப் பணியாளா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT