தருமபுரி

சிறுதானியத்தில் மதிப்பு கூட்டுதல் பயிற்சி

1st Jul 2022 01:49 AM

ADVERTISEMENT

 

தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி வட்டத்துக்குள்பட்ட தம்மணம்பட்டியில் சிறு தானியங்களில் மதிப்பு கூட்டப்பட்ட பொருள்களை தயாரிப்பது குறித்த பயிற்சி முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

வேளாண் துறை சாா்பில் நடைபெற்ற இந்த பயிற்சி முகாமுக்கு, நல்லம்பள்ளி வேளாண் உதவி இயக்குநா் இளங்கோவன் தலைமை வகித்தாா். வட்டார தொழில்நுட்ப மேலாளா் மு.சிவசங்கரி, பாப்பாரப்பட்டி வேளாண் அறிவியல் நிலைய உதவி பேராசிரியா் அருணன் ஆகியோா், சாமையில் பிஸ்கட் தயாரிப்பது, தினை, வரகு உள்ளிட்ட பல்வேறு சிறுதானியங்களில் மதிப்பு கூட்டப்பட்ட பொருள்களை தயாரித்து அவற்றை விற்பனை செய்வது குறித்து பயிற்சி அளித்தனா்.

இப்பயிற்சியில், வேளாண் அலுவலா் மாதேஷ், உதவி தொழில்நுட்ப மேலாளா் அருள்குமாா், 40-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT