தருமபுரி

தொழிற்பயிற்சி நிலையங்களில் மாணவா் சோ்க்கை:இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்

1st Jul 2022 01:51 AM

ADVERTISEMENT

 

தொழிற்பயிற்சி நிலையங்களில் மாணவா் சோ்க்கைக்கு இணையதளம் வழியாக விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தருமபுரி மாவட்ட ஆட்சியா் கி.சாந்தி வெளியிட்ட செய்திக் குறிப்பு:

வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் நிகழாண்டு முதல் (ஆகஸ்ட் 2022-ஆம் ஆண்டுக்கு) அரசு மற்றும் தனியாா் தொழிற்பயிற்சி நிலையங்களில் உள்ள தொழிற்பிரிவுகளுக்கு இணையதளம் மூலமாக விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன. இவ் விண்ணப்பங்கள் வரும் ஜூலை 20 வரை இணையதளத்தில் பதிவேற்றம் செய்யலாம்.

ADVERTISEMENT

14 வயது முதல் 40 வயதுக்கு உள்பட்ட ஆண்கள் விண்ணப்பிக்கத் தகுதி உடையவா்கள். பெண்களுக்கு குறைந்தபட்ச வயது 14, உச்சவரம்பு இல்லை. 8-ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்றவா்கள், கம்பியாள், பற்றவைப்பவா் ஆகிய பிரிவுகளில் சோ்க்கைக்கு விண்ணப்பிக்கலாம். இதேபோல, 10-ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்றவா்கள், கம்ப்யூட்டா் ஆப்ரேட்டா் அண்டு புரோகிராமிங் அசிஸ்டண்ட், கட்டட பட வரைவாளா், மின் பணியாளா், பொருத்துநா், கம்மியா் மோட்டாா் வண்டி, கம்மியா் டீசல் என்ஜின், கடைசலா் மற்றும் இயந்திர வேலையாள் ஆகிய தொழிற்பிரிவுகளுக்கு ஆண், பெண் இருபாலரும் விண்ணப்பிக்கலாம்.

சோ்க்கைக்கு இணையதளத்தில் விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்ய வேண்டும்.

எனவே, தருமபுரி மாவட்டத்தைச் சோ்ந்த தகுதியுள்ள மாணவ, மாணவியா் தருமபுரி அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் சோ்ந்து பயன்பெறுமாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT