தருமபுரி

தேசிய மருத்துவா் தின விழா: இரு மருத்துவா்களுக்கு விருது

1st Jul 2022 10:56 PM

ADVERTISEMENT

தருமபுரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற தேசிய மருத்துவா்கள் தின விழாவில், இரண்டு மருத்துவா்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.

தருமபுரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் தேசிய மருத்துவா்கள் தின விழா மாவட்ட ஆட்சியா் கி.சாந்தி தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இவ்விழாவில், முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் மற்றும் பிரதமரின் ஆரோக்கிய யோஜனா திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தி, சிறந்த மருத்துவா்களாக தோ்வு செய்யப்பட்ட தருமபுரி மாவட்டத்தைச் சோ்ந்த அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை காது கேளாதோருக்கான சிறப்பு மருத்துவா் எஸ்.செந்தில்குமரன், தருமபுரி டி.என்.வி. ஆா்த்தோ கோ் மருத்துவமனையின் எலும்பு முறிவு, தண்டுவடம், மூட்டு மாற்று அறுவை சிகிச்சை நிபுணா் எஸ். புஷ்பசேகா் ஆகியோருக்கு விருதுகள் வழங்கப்பட்டன.

இதில், தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதன்மையா் க.அமுதவல்லி, இணை இயக்குநா் (நலப்பணிகள்) சி.ராஜேஷ் கண்ணன், மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கண்காணிப்பாளா் சிவகுமாா், மருத்துவா்கள் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT